பெற்ற குழந்தைகளை கொன்ற அபிராமி மற்றும் சுந்தரத்துக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

குழந்தைகளுக்கு விஷம் வைத்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அபிராமி மற்றும் கள்ளக்காதலன் சுந்தரம் ஆகியோருக்கு அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குன்றத்தூரை சேர்ந்த அபிராமி கடந்த மாதம் 30-ம் திகதி கள்ளக்காதலனான பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரத்துடன் செல்வதற்காக தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்தார்.

இதையடுத்து அபிராமியும், சுந்தரமும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணைக்காக இருவரும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் இருவரையும் அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்