பறிகொடுத்த பிள்ளைக்கு பதிலா பணம்! மகனுக்கு அரசு வேலை: ஏற்றுக்கொள்ள முடியவில்லை என தாய் கண்ணீர்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூட்டின் காரணமாக பலியான மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு தமிழக அரவு வழங்குவதாக அறிவித்திருந்த இழப்பீட்டுத் தொகையையும் அரசு வேலையையும் பெறுவதற்காக தூத்துக்குடியிலிருந்து குடும்பங்களின் உறவினர்கள் வந்திருந்தனர்.

அதில்மகளான ஸ்னோலினைப் பறிகொடுத்த வனிதா பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், போன வாரம் தான் சென்னை வரும் படி தகவல் வந்தது.

இவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து என் மகளின் இழப்பை சரி செய்யமுடியுமா, சரி செய்ய முடியும் என்று அவங்க நினைக்கிறாங்க, ஒரு பொண்ணுங்க, இப்படி பலி கொடுத்துட்டு நிற்கிறேன்.

எம் மகள் கிட்ட போய் சேரும் வரைக்கும் என் மனசு நிம்மதியாக இருக்காது, ஒரு உயிருக்கு எத்தனை கோடி செலவு பண்றோம். பிள்ளை வேணும் என்பதற்காக எத்தனை மருத்துவமனை ஏறி, இறங்குகிறோம்.

அவங்களுக்கு எதாவது நோய் வந்திருச்சுனா, சொத்துக்களை எல்லாம் விற்று காப்பாற்றுகிறோம், அப்படி வளர்த்த என் மகளை சுட்டு போட்டுட்டு இப்போ பணம் கொடுக்கிறாங்க, நான் இந்த பணத்தை வாங்கி என்ன பண்றது என்று யோசித்தேன்.

ஆனாலும் ஒரு பையன் இருக்கான், அவனோடு எதிர்காலத்துக்கு பயன்படும் என்று நினைத்து சமாதானம் பண்ணிகிட்டேன். என் மகன் பேரு ஜான்ராஜ். 23 வயதாகும் அவனுக்கு கிராம உதவியாளர் வேலை கொடுத்திருக்காங்க, இருந்தாலும் இதை ஏன் மனசு ஏத்துக்கமாட்டிங்குது என்று கண்ணீர் வடித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்