வனிதா விஜயகுமாருடன் நெருக்கம்? நடன இயக்குநர் ராபர்ட் வேதனை

Report Print Deepthi Deepthi in இந்தியா

நடிகை வனிதா விஜயகுமார் தனது தந்தையுன் ஏற்பட்ட வீட்டு பிரச்சனை காரணமாக ஒவ்வொரு ஊடகங்களாக சந்தித்து தனக்கு நேர்ந்த அநியாயம் குறித்து பேட்டி அளித்து வருகிறார்.

மேலும், இவர் 3 முறை திருமணம் செய்துகொண்டதாகவும், இரண்டு பேரை விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவதாக நடன இயக்குநர் ராபர்ட்டுடன் இருந்தார் என கூறப்பட்டது.

மேலும், ராபர்ட்டுடனும் இணைந்து கிசுகிசுக்கப்பட்டார். விஜயகுமார் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் தற்போது இவர் ராபர்ட்டுடன் வசிப்பதாக கூறப்பட்டது.

இந்த செய்தியை இதற்கு முன்னர் மறுத்துள்ள ராபர்ட் தற்போது மீண்டும் அளித்துள்ள பதிலில், எனக்கும் வனிதாவுக்கும் எந்த ஒரு நெருக்கமும் கிடையாது. எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

அவருடன் என்னை இணைந்து பேசப்படுவது என குடும்பத்தினரை பாதித்துள்ளது. இதனால் மனவேதனையில் இருக்கிறேன். அவருடன் நான் ஒரு திரைப்படத்தில் பணிபுரிகிறேன், இது தவிர வேறு ஒன்றும் கிடையாது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்