தகாத உறவு விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது இதற்காக தான்: ஜோசப் ஷைன் விளக்கம்

Report Print Kabilan in இந்தியா

தன்னுடைய நண்பரின் தற்கொலையே தகாத உறவு விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர தூண்டியதாக, இத்தாலியைச் சேர்ந்த இந்தியரான ஜோசப் ஷைன் தெரிவித்துள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த இந்தியரான ஜோசப் ஷைன் என்பவர், தகாத உறவில் ஈடுபடும் இருவரில் பெண்ணை தண்டிக்காமல், ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்குவதை எதிர்த்து பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.

இந்நிலையில், இந்த பொதுநல வழக்கினை தொடர்ந்து குறித்து ஜோசப் ஷைன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

‘திருமணத்தை தாண்டிய உறவில் பாதிப்பை எதிர்கொள்வதில் இந்திய ஆண்களை பாதுகாக்கவே விரும்பினேன். உடன் பணியாற்றிய பெண் கொடுத்த போலியான பாலியல் பலாத்கார வழக்கு காரணமாக, என்னுடைய நண்பர் தற்கொலை செய்துகொண்டார்.

இதுவே என்னை வழக்கு தொடர வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியது. திருமணம் செய்துகொண்ட பெண்கள் விருப்பத்துடன் உறவில் ஈடுபடலாம். ஆனால், ஆண்கள் மட்டுமே பெண்ணின் கணவர் புகார் அளிக்கும் போது பாதிப்பை எதிர்கொள்வார்கள்.

இதுபோன்ற புகார் ஆண்களை மட்டும் தனிமைப்படுத்துகிறது. அவரால் இதனை சமாளிக்க முடியாத நிலை ஏற்படலாம். இது ஒரு அடிப்படையான நடவடிக்கை தான். இதனால் மேலும் மாற்றங்களை உருவாக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்