ஆண் பொலிசின் நெகிழ்ச்சி செயல்: வைரலாகும் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தெலுங்கானா மாநிலத்தில் தாய் ஒருவர் தேர்வு எழுதிக்கொண்டிருக்க அவரது 4 மாத குழந்தையை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பத்திரமாக பார்த்துக் கொண்ட நெகிழ்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த சுதாவிற்கு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்.

இதனால் அரசு அறிவித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அதன்படி தேர்வு எழுத வாய்ப்பும் வந்தது.

கையில் 4 மாத குழந்தையுடன் தேர்வறைக்கு சென்ற சுதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே தனது 4 மாத குழந்தையை அங்குள்ள குழந்தைகள் யைமத்தில் சுதா கொடுத்துவிட்டு தேர்வறைக்கு சென்றுவிட்டார்.

அங்கு பொறுப்பில் இருந்தது ஒரு 14 வயது சிறுமிதான். அந்த சிறுமியால் 4 மாத குழந்தையின் அழுகையை சரிசெய்ய முடியவில்லை.

இதனால், அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் ரஹ்மான், குழந்தையை லாவகமாக தூக்கி பாட்டு பாடி சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் சுதா தேர்வு முடித்துவிட்டு திரும்பி வரும்வரை குழந்தையை பத்திரமாக கவனித்துக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி அனைவரது பாராட்டையும் ரஹ்மான் பெற்றுள்ளார். ஆணுக்கும் தாய்மை குணம் உண்டு என்பதை இந்த புகைப்படம் நிரூபித்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers