பிரபல நடிகரின் மனைவி மாரடைப்பால் மரணம்: கண்ணீரில் திரையுலகம்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகர் ராஜ்கபூரின் மனைவி கிருஷ்ணா தனது 88-வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் ராஜ்கபூர்.

இவரது மனைவி கிருஷ்ணா சில ஆண்டுகளாக சுவாச கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக பிரபல நடிகை ரவீனா டெண்டன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், மொத்த கபூர் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள், கிருஷ்ணா மரணமடைந்து விட்டார் என பதிவிட்டுள்ளார்.

இதே போல திரையுலக பிரபலங்கள் பலரும் கிருஷ்ணா மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மறைந்த கிருஷ்ணா, ராஜ்கபூரை கடந்த 1946-ல் திருமணம் செய்தார்.

தம்பதிக்கு ரிஷிகபூர், ரந்தீர்கபூர், ராஜீவ்கபூர், ரீது நந்தா, ரீமா கபூர் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers