600 பேரை காப்பாற்றிய இளைஞன் பரிதாப பலி! என் அம்மாவை அவர் தான் காப்பாற்றினார் என இளம்பெண் கண்ணீர்

Report Print Santhan in இந்தியா

கேரள வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றிய இளைஞர் வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் அம்மாநில மக்களை பெரிதும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த சம்பவத்தின் போது, வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதற்காக மீட்பு படையினருடன் மீனவர்களும் இணைந்து மக்களைக் காப்பாற்றினார்.

அப்படி வெள்ளத்தில் சிக்கிய மக்களைக் காப்பாற்றியவர் தான் ஜெனிஸ். 24 வயதான இவர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சாலை விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.

இதை அறிந்த மக்கள் அவருக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது குறித்து உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

அப்போது Chengannur பகுதியின் நகரச் செயலாளர் முதலில் ஜெனிசை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது Chengannur பகுதி வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதில் ஏராளமான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு போராடி வருகின்றனர். அதனால் உங்களின் உதவி தேவை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஜெனிஸ் உட்பட அவரது குழுவினர் அப்பகுதியில் சிக்கியிருந்த மக்களை காப்பாற்றியுள்ளனர். இப்படி அவர்கள் சுமார் 600-பேரை காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து அமெரிக்காவில் இருக்கும் லீனா என்பவர் கூறுகையில், வெள்ளத்தின் போது நான் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்தேன். என்னுடைய 83 வயது அம்மா என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

பல முயற்சிகள் எடுத்தும் அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இதனால் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. 3-4 நாட்களாக ஒன்றும் தெரியாமல் பயந்தேன். அதன் பின் எம்.எல்.ஏ Saji Cherian பேஸ்புக் லைவ்வில் வந்தார்.

அப்போது நான் என் அம்மாவை பற்றி கமெண்டில் போட்டேன், அடுத்த சில மணி நேரங்களில் என் அம்மா பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்தது. அம்மாவை ஜெனிஸ் குழுவினர் தான் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர். அம்மாவை காப்பாற்ற கடவுள் தான் அவரை அனுப்பி வைத்துள்ளார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers