குடும்பத்துடன் கார் விபத்தில் சிக்கிய பிரபல இசைக்கலைஞர் மரணம்: கதறும் குடும்பம்

Report Print Arbin Arbin in இந்தியா

கேரளாவில் வயலின் இசையில் கோலோச்சிய பிரபல இசைக்கலைஞர் பாலபாஸ்கர் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

40 வயதான பாலபாஸ்கர் கடந்த 25 ஆம் திகதி குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில் திருவனந்தபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

குறித்த விபத்தில் அவரது 2 வயது மகளும் வாகன சாரதி அர்ஜுனும் கொல்லப்பட்ட நிலையில் பாலபாஸ்கர் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆயிய இருவரும் தீவிர சிகிச்சையில் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் செவ்வாய் அன்று காலை சிகிச்சை பலனின்றி பாலபாஸ்கர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17-வது வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்க துவங்கிய வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் தமது 22-வது வயதில் கல்லூரி தோழியான லட்சுமியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

நீண்ட 16 ஆண்டுகள் காத்திருந்த பின்னர் பிறந்த மகள் தேஜஸ்வினியும் சாலை விபத்தில் பலியானார். பாலபாஸ்கரின் மறைவு கேரள திரையுலகம் மற்றும் இசைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers