அக்காவின் மீது தம்பிக்கு ஏற்பட்ட சந்தேகம்: குடும்பமே சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தேனி மாவட்டத்தில் தனது அக்காவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட காரணத்தால் அவரை கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார் தம்பி.

கருப்பையா - பேச்சியம்மாள் தம்பதியினருக்கு மரகதம் என்ற மகளும், செல்வகுமார் என்ற மகளும் உள்ளனர்.

இதில், மரகதத்திற்கு திருமணமாகி குழந்தை உள்ளது. ஆனால் கணவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

மகன் செல்வகுமார் வேறு ஊரில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மகள் மரகதம் நடத்தையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊரில் இருந்து வந்திருந்த மகன் செல்வகுமாரிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

வீட்டில் மரகதத்திடம், செல்வக்குமார் மற்றும் அவரது பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாத்தின்போது எரிச்சலடைந்த செல்வக்குமாரும், அவரது பெற்றோரும் அருகில் இருந்த கத்தியை எடுத்து மரகதத்தை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மரகதம் உயிரிழந்தார்.

சம்பவம் நடந்தவுடன் செல்வகுமார் அந்த இடத்தில் இருந்து தப்பினார். கொலை சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் வழக்கு பதிவு செய்து கருப்பையா மற்றும் பேச்சியம்மாளை கைது செய்தனர்.

தப்பி ஓடிய செல்வகுமாரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers