இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் கைது: ஆசனவாயை சோதித்த பொலிசாருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் ரூ.15¾ லட்சம் மதிப்பிலான தங்கத்தை ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல்பாசித் (23), ஷேக் தாவூத் (33), சதீஷ் (25) ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்கள் உடமைகளை சோதனை செய்தபோது தங்கம் ஏதுவும் கிடைக்கவில்லை.

பின்னர் அவர்களிடம் தனித்தனியாக நடத்தப்பட்ட சோதனையில் மூவரும் தங்களது ஆசனவாயில் வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது

அதிகாரிகள் சோதனையில் தங்கத்தை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அவர்கள் 3 பேரும் தங்க துகள்களை களிமண் போன்ற ஒரு பொருளுடன் கலந்து ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி உள்ளனர்

சுமார் ரூ.15¾ லட்சம் மதிப்புள்ள 517 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்