என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை! காப்பாத்துங்க.. மாணவி வெளியிட்ட வீடியோ

Report Print Raju Raju in இந்தியா

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பெற்றோர் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதால் காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி மாணவி வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

வேர்கிளம்பி அருகே கண்ணனூரை சேர்ந்தவர் சஜூ (24). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெரில் (22) என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.

இவர்களின் காதல் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது

இதனால் பெரிலை கல்லூரிக்கு செல்ல விடாமல் பெற்றோர் தடுத்த நிலையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் சஜூவை தான் காதலிக்க வில்லை எனவும் அவர் தான் தன் பின்னால் வந்து தொல்லை கொடுப்பதாகவும் எழுதி கொடுக்கும்படி கேட்டு அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.

இல்லாவிட்டால் என் மீது ஆசிட் ஊற்றுவேன் என்றும் அடித்து கை, காலை முறிப்பேன் என்றும் மிரட்டுகின்றனர். காதலன் சஜூவை கூலி படை ஏவி கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

நான் தற்போது எனது பாட்டி வீட்டில் பத்திரமாக உள்ளேன். எங்கள் வீட்டுக்கு சென்றால் என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

என்னை நீங்கள்தான் காப்பாற்றி என் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அந்த பெண் அழுதுக் கொண்டே பயந்து பயந்து பேசும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதையடுத்து அந்த பெண்ணுக்கும் அவர் காதலனுக்கும் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படும் முன்னர் பொலிசார் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers