மனைவியை உள்ளூரில் தவிக்க விட்டு வெளிநாட்டில் கணவர் செய்த மோசமான செயல்: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

மனைவியை பஞ்சாப்பில் தவிக்க விட்டு, ஜேர்மனிக்கு சென்று வேறு பெண்ணை மணந்த கணவன் மீண்டும் இந்தியாவுக்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பை சேர்ந்தவர் குர்மீத் சிங். இவருக்கும் பிரித்பால் என்ற பெண்ணுக்கும் கடந்த 2011-ல் திருமணம் நடந்த நிலையில் 2012-ல் ஆண் குழந்தை பிறந்தது.

திருமணமான சில மாதத்திலேயே மனைவியை விட்டு பிரிந்து பணி விடயமாக ஜேர்மனிக்கு சென்றார் குர்மீத்.

இந்நிலையில் மாமியார் வீட்டில் தங்கியிருந்த பிரித்பாலை அவரின் மாமனாரும், மாமியாரும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதனிடையில் மனைவியுடன் போனில் பேசி வந்த குர்மித் கடந்த 2015லிருந்து பேசுவதை நிறுத்திவிட்டார்.

அப்போது தான் குர்மித் ஜேர்மனி பெண்ணை அங்கு இரண்டாம் திருமணம் செய்து கொண்டதோடு அவருக்கு குழந்தைகள் இருப்பதும் பிரித்பாலைக்கு தெரியவந்தது.

இதனிடையில் நேபாளம் வந்து அங்கிருந்து இந்தியாவின் டெல்லிக்கு குர்மித் வருகிறார் என்பதை அறிந்து கொண்ட பிரித்பால் இது குறித்து பொலிசில் புகார் செய்தார்.

இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் வைத்து குர்மித்தை பொலிசார் நேற்று கைது செய்தனர்.

இது குறித்து டெல்லியில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவிக்கையில், ஜேர்மனியில் குர்மித் பணிபுரியும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளவுள்ளோம்.

முதல் மனைவியை குர்மித் கைவிட்டதால் இந்தியாவில் அவர் தேடப்பட்டு வந்தார் என்பதோடு, அவரின் பாஸ்போர்ட் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதையும் அவர்களுக்கு தெரிவிக்க உள்ளோம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers