திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு: கதறும் பெற்றோர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கணவரின் கொடுமை தாங்காமல் திருமணமான மூன்றே மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தின் விசாகபட்டினம் மாவட்டத்தில் வியாழனன்று இரவு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் 25 ஆம் திகதி ரோகினி(25) என்பவருக்கும் பாரவாடா பகுதியை சேர்ந்த மோகன் குமார் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தை அடுத்து புதுமணதம்பதிகள் குர்மன்னேபாளயம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செப்டம்பர் 3-ஆம் திகதியில் தனிக்குடித்தனம் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 27 ஆம் திகதி இரவு மோகன் அலுவலகம் முடித்து குடியிருப்பு திரும்பியபோது, தமது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டுள்ளார்.

உடனடியாக அவரது உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார் மோகன். இதனையடுத்து உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்துள்ளனர் ரோகினியின் உறவினர்கள்.

மட்டுமின்றி ரோகினியின் தற்கொலை தொடர்பில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறி பொலிசாருக்கும் புகார் அளித்துள்ளனர்.

கணவரின் கொடுமை தாங்காமலே ரோகினி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அந்த புகாரில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக மோகன் தொடர்பில் தனது பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார் ரோகினி. ஆனால் திருமண பந்தத்தில் சகிப்புத் தன்மையே முக்கியம் எனக் கூறி ரோகினிக்கு உபதேசம் செய்துள்ளனர் அவரது பெற்றோர்.

தற்போது ரோகினி தற்கொலை செய்து கொண்டுள்ளதால் மோகன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers