ராகுல் காந்தியை உயிராக காதலித்த பிரபல நடிகை: 16 ஆண்டுகள் குறித்து அம்பலமான ரகசியம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் விரும்பியதாகவும், அவருடன் டேட்டிங் செல்ல ஆசைப்பட்டார் என்ற தகவலை சோனியா குடும்பத்திற்கும், கரீனா கபூர் குடும்பத்திற்கும் நெருங்கிய நண்பராக இருந்த பிரபல பத்திரிகையாளருமான ரஷீத் கித்வாய் தனது புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டுவாக்கில், இரு குடும்பங்களும் நெருங்கி பழகி வந்துள்ளன. அப்போது, ராகுல் காந்தி, எம்.பி. ஆகவில்லை.

அவர் மீதான தனது விருப்பத்தை வெளிப்படுத்திய கரீனா கபூர், ராகுலுடன் டேட்டிங் செல்ல ஆசைப்பட்டுள்ளார்.

அதுபோல், ராகுல் காந்தியும் நடிகை கரீனா கபூர் நடித்த படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டினார். முதல் நாளிலேயே அந்த படங்களை பார்த்து விடுவார் என்று பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்களை நடிகை கரீனா கபூர் தற்போது மறுத்துள்ளார்.அவை அனைத்தும் இரு குடும்பங்களும் நெருக்கமாக பழகிய கடந்த கால நிகழ்வுகள் என்று கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகானை காதல் திருமணம் செய்து கொண்ட கரீனா கபூருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers