நான் முதலமைச்சரானால்... அரசியலில் தீவிரம் காட்டும் விஜய்?

Report Print Kavitha in இந்தியா

நடிகர் விஜய் நடித்த சர்கார் பட இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இதன்போது பேசிய விஜய், மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது, சர்கார் படத்தில் அரசியலிலேயே மெர்சல் பண்ணி இருக்கோம்.

சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை, நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் நான் முதல்வரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்றும், மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை.

தலைவன் நன்றாக இருந்தால் தான் மாநிலமும் நன்றாக இருக்கும், இங்கு பிறந்த சான்றிதழ் முதல் இறந்த சான்றிதழ் வாங்கும் வரை அனைத்துக்கும் பணம் தேவை.

ஆனால் நியாயம் தான் ஜெயிக்கும், கொஞ்சம் தாமதம் ஆகும், நெருக்கடி வரும்போது நல்லவர்கள் முன்வருவார்கள்.

அவர்களுக்கு கீழ் வரும் சர்கார் பயங்கரமாக இருக்கும் என பேசியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers