இளம் தம்பதிக்கு பெற்றோர் கொலை மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

Report Print Arbin Arbin in இந்தியா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த இளம் தம்பதி ஒன்று பெற்றோரின் கொலை மிரட்டலுக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 22). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரும், திருமங்கலம் அடுத்த உசிலம்பட்டியை சேர்ந்த மஞ்சுபாஷினி (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததை அடுத்து மஞ்சுபாஷினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யவும் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சரத்குமார், மஞ்சுபாஷினி இருவரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

கடந்த மார்ச் மாதம் 4-ஆம் திகதி திருவள்ளூரை அடுத்த ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர் ஊத்துக்கோட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தையும் பதிவு செய்துகொண்டனர்.

இந்த நிலையில் மஞ்சுபாஷினியின் பெற்றோர் தன் மகள் காணாமல் போய்விட்டாள். அவளை கண்டுபிடித்து தருமாறு மதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

மேலும் சரத்குமாரின் உறவினர்கள் 2 பேர் மீது புகார் அளித்ததை தொடர்ந்து பொலிசார் அவர்கள் இருவரையும் பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மஞ்சுபாஷினியின் பெற்றோர், சரத்குமார் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் புகார் அளித்து அவர்களை துன்புறுத்தி வருகின்றனர்.

மட்டுமின்றி சரத்குமார் மற்றும் மஞ்சுபாஷினியை கொலை செய்யவும் திட்டம் தீட்டி ஆட்கள் மூலம் தேடி வருவதும் தெரியவந்தது.

இதனால் பதறிப்போன சரத்குமார், மஞ்சுபாஷினி ஜோடி தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி திருவள்ளூரில் உள்ள மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் தங்களுக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers