தமிழகத்திற்கு வரும் 7-ம் தேதி 'ரெட் அலர்ட்': வானிலை மையம் எச்சரிக்கை

Report Print Vijay Amburore in இந்தியா

தமிழகத்தில் அக்டோபர் 7-ம் தேதி மிகபெரிய கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நிர்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் அக்டோபர் 7ம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும். அன்றைய தினம் 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்யக்கூடும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும். அசாதாரண சம்பவங்கள் நிகழாமல் தடுக்க பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறியுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் விரைந்து எடுக்க வேண்டும் எனவும் இந்திய வானிலை அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு அரபிக் கடலில் லேசான தாழ்வு அழுத்தம் நாளை உருவாக வாய்ப்புள்ளதால் இன்னும் 3 நாளைக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும். குறிப்பாக சென்னையில் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...