காட்டுக்குள் சென்று வருவதாக கூறிய காதல் ஜோடி: சடலமாக தூக்கில் தொங்கிய பரிதாபம்

Report Print Vijay Amburore in இந்தியா

சேலம் மாவட்டத்தில் இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடியினர் வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தங்கபாலு (24) என்பவர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா மோளக் கவுண்டம்பாளையம் பகுதியில் தங்கி பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்பொழுது அவருக்கும், அதேபகுதியை சேர்ந்த மைனாவதி (16) என்ற சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. சிறுமி 10-ம் வகுப்பு மட்டுமே படித்து வந்த நிலையில், காதல் விவகாரம் சிறுமியின் வீட்டாருக்கு தெரிந்ததால், படிப்பை பாதியில் நிறுத்தினர்.

மேலும் அங்கிருக்கும் ஒரு விடுதியில் மைனாவதியை தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் விடுதிக்கு சென்ற தங்கபாலு, மைனாவதியை அழைத்து கொண்டு ஓமலூர் அருகே வசித்து வரும் தன்னுடைய அக்கா ஜெயாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மைனாவதியை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, அக்கா ஜெயா மற்றும் அவருடைய கணவர் பிரகாஷை வற்பறுத்தியுள்ளார்.

இதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்ததோடு, பெரியவர்களிடம் பேசி தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இதற்கிடையில் காட்டு பகுதிக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி இருவரும் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த ஜெயா, காட்டு பகுதியில் உள்ள தன்னுடைய மாமியாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு தங்கபாலு தன்னுடைய காதலி மைனாவதியுடன் சடலமாக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு தொங்கியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers