டெல்லியில் பைக்கில் சென்றவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Report Print Kavitha in இந்தியா

டெல்லியில் காசியாபாத் அருகே பைக்கில் சென்றவர் மீது கெமிக்கல் கொட்டிய காரணத்தால் அந்த நபர் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகி உள்ளார்.

குறித்த சம்பவம் காசியாபாத் அருகே உள்ள ஜோரி என்க்லேவ் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நடந்து இருக்கிறது.

அமித் சவுகான் (37) என்ற நபர் தன்னுடைய பைக்கில் சென்ற போது மேலே இருந்து சாரல் போல கெமிக்கல் ஒன்று கொட்டி இருக்கிறது. இதனால் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்துள்ளார்.

அருகே பைக்கில் வந்த ராகுல் (17) என்ற நபருக்கு இதில் காயம்பட்டு இருக்கிறது.

மேலும் இவர்களை வெகுவேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதில் சவுகான் இறந்துவிட்டார், ராகுல் மோசமான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் இவர்கள் பைக் ஓட்டி சென்ற இடத்திற்கு மேல் புதிய மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதில் இருந்து இந்த கெமிக்கல் கொட்டி இருக்குமா?” என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் டெல்லி மெட்ரோ நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.

மெட்ரோ பணியில் எந்த கெமிக்கலும் பயன்படுவதில்லை என்றுள்ளனர். இதற்கு வேறு காரணம் இருக்கலாம், அதை பொலிஸ் விசாரிக்க வேண்டும் என்றுள்ளனர்.

பொலிசார் குறித்த சம்பத்திற்கு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers