தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: உண்மை நிலவரம் என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா

அக்டோபர் 7-ம் திகதி தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேவையில்லாத வதந்திகளும் பரவி வருகிறது.

தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட் விதிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் 204.5 மில்லி மீட்டருக்கு மேல் கனமழை பெய்யும் என அர்த்தம் இல்லை.

இங்கே ரெட் அலர்ட் என்பது பரவலாக பல இடங்களில் கன மழை பெய்யக்கூடும் அதனால் நடவடிக்கை தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 4 விஷயங்களையும் ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்க்க வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுதான் ரெட் அலர்ட்

அண்மையில் தென்மேற்கு பருவ மழையின் போது தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரே நாளில் 200 மில்லிமீட்டர் மழை பெய்தது.

சோலையார் அணையில் 24 மணி நேரத்தில் 400 மில்லி மீட்டர் மழைகூட பெய்தது. அந்த மாவட்டத்தில் அப்போது ரெட் அலர்ட் இருந்தது.

அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் புயல் நமது கரையிலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. இது கிழக்கு பக்கத்திலிருந்து வரும் காற்றை வலுப்படுத்துகிறது. இதனால், மலைகளில் ஈரப்பதம் தேங்கி மழைக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. 2009-ல் நீலகிரி மாவட்டத்தின் கேட்டி பகுதியில் ஒரே நாளில் 820 மில்லி மீட்டர் மழை பெய்தது. இத்தகைய புயலால் கடந்த காலங்களில் குன்னூர் பகுதியே அதிக மழை பெற்றிருக்கிறது.

இந்த முறை 2009 போல் இல்லாமல் புயலானது இந்திய கடற்கரையிலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. இது ஓமன் நாட்டை நோக்கிச் செல்கிறது. அதனால் கேரளாவுக்கோ தமிழ்நாட்டுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை.

அதேவேளையில், தமிழகத்தின் மலைப்பிரதேசங்களில் கவனம் கொள்ள வேண்டும். அதுவும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கண்காணித்தால் போதும்.

இந்த ரெட் அலர்ட் சென்னைக்கானது அல்ல. எனவே டிசம்பர் 1 மழையை நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம். மலைப் பிரதேசங்களிலும் கூட ஆகஸ்ட் 2018-ல் பெய்த அளவுக்கு மழை பெய்யப் போவதில்லை.

சென்னை மக்கள் செய்திகளை அச்சத்துடன் பார்ப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். சென்னைக்கு மழை தேவை. சென்னைக்கு நீர் வழங்கும் 4 ஏரிகளும் வறண்டு கிடக்கிறது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers