திருமணமான ஒரே மாதத்தில் சிதைந்த கனவு: கணவர் தூக்கிட்டு தற்கொலை... மனைவியிடம் விசாரணை

Report Print Arbin Arbin in இந்தியா

திருமணமான ஒரு மாதத்தில் வெளிநாட்டவர் ஒருவர், மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் 40 வயதான ஆதாம் கிராஸ்வார்ட். சென்னையில் உள்ள தனியார் இசை பயிற்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அந்த நிறுவனத்தில் இசை பயிற்சிக்கு வந்த சென்னை, கொட்டிவாக்கம் பகுதி இளம்பெண் ரஷி (24) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. மகளின் காதல் விவகாரம் குறித்து பெற்றோருக்கு தெரியவந்தது.

உடனே ரஷியின் பெற்றோர் ஆதாம் கிராஸ்வார்டை வீட்டிற்கு அழைத்து விசாரித்தனர். பின்னர், ஆதாம் கிராஸ்வார்டை அவரது பெற்றோரை அழைத்து வந்து முறைப்படி பெண் கேட்க ரஷியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஆதாம் ஏற்கெனவே திருமணமானவர் என்ற தகவல் ரஷியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனால் தங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க ரஷியின் பெற்றோர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆதாம் தமது முன்னாள் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்துள்ளார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் தனது காதலி ரஷியை திருமணம் செய்துள்ளார் ஆதாம்.

திருமணத்தை அடுத்து தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு கணவரை திடீரென்று தேடிய ரஷி, அறை ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே, இதுகுறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் ரஷி புகார் அளித்தார். பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆதாம் கிராஸ்வார்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.

தற்கொலை தொடர்பாக அவரது மனைவி ரஷி மற்றும் அவரது பெற்றோரிடம் பொலிசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers