தமிழகம் வெள்ளத்தில் மூழ்குவது நிச்சயம்! அடித்துக் கூறும் புயல் ராமச்சந்திரன்

Report Print Fathima Fathima in இந்தியா

2018ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தமிழகம் வெள்ளத்தில் மூழ்கும் என புயல் ராமச்சந்திரன் கணித்து கூறியிருப்பதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.

வருட இறுதி நெருங்க நெருங்க அனைவருக்குமே இருக்கின்ற பதற்றம் மழையை பற்றியது தான்.

அதிலும் 7ம் திகதி ரெட் அலர்ட் கொடுத்துள்ளதால் மக்கள் பயந்துபோய் இருக்கின்றனர்.

இந்நிலையில் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வானிலையை கணித்து சொல்லும் புயல் ராமச்சந்திரன் சில மாதங்களுக்கு முன்னதாகவே இந்த ஆண்டு இறுதியில் வெள்ளத்தால் தமிழகம் மிதக்கும் என கணித்து கூறியிருந்தார்.

மேலும் இவரது வானிலை கணிப்பு இதுவரை பொய்யானதாக இல்லை எனவும் கூறியிருப்பதால், ஒருவேளை நடந்துவிடுமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

கடந்த 2016ம் ஆண்டு நேபாளத்தில் பலத்த நிலநடுக்கம் வரும் என தான் கணித்ததாகவும் கூறியிருக்கிறார்.

குறிப்பாக மதுராந்தகம் தொடங்கி தென் தமிழகம் வரை பலத்த மழை பொழியும் என்றும், வெள்ளப் பாதிப்பு நிச்சயம் எனவும் அடித்துக் கூறியிருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்