நடிகர் விஜய் அரசியல் பேச்சு: கமல்ஹாசன் கூறிய பதில் என்ன தெரியுமா?

Report Print Vijay Amburore in இந்தியா

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை வரவேற்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் விஜய், சமீபத்தில் நடைபெற்ற சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் குறித்த பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

அதில், படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என கூறியிருந்தார். அவருடைய இந்த கருத்தானது, அனைத்து ஊடகங்களிலும் விவாத பொருளாக மாறியது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை விஜய் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தை நான் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம் எனவும், மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய தொழிற்சாலை தேவையில்லை எனவும் கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்