மனைவியை கொலை செய்த பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்: 18 வருடங்களுக்கு பின்னர் விடுதலை

Report Print Vijay Amburore in இந்தியா

India's Most Wanted நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் Suhaib Ilyasi, மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான India's Most Wanted என்னும் நிகழ்ச்சியை Suhaib Ilyasi தொகுத்து வழங்கி வந்தார். இத்தொடரின் மூலம் Suhaib Ilyasi மக்களிடையே மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார்.

இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதியன்று மனைவி அஞ்சுவை கத்தியால் குத்தினார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வரதட்சணை கேட்டு Suhaib Ilyasi தன்னுடைய மகளை கொடுமைப்படுத்தியதாகவும், தற்போது கொலை செய்துவிட்டதாகவும், Suhaib-ன் மாமியார் பொலிஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அதே ஆண்டு மார்ச் மாதம் Suhaib Ilyasi கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் S Muralidhar மற்றும் Vinod Goel முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கொலை செய்யப்பட்ட அவருடைய மனைவியின் பெற்றோருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் அவருடைய மேல்முறையீடு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது.

முன்னதாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தன்னுடைய முதல் மனைவியின் உடல்நல குறைபாட்டினால் அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்