ஆடு மேய்த்து படிக்க வைத்த கணவனை பார்த்து மனைவி சொன்ன வார்த்தை! நடந்த விபரீத சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஆடு மேய்த்து மனைவியை கம்ப்யூட்டர் படிக்க வைத்த போதும், அவர் விவாகரத்து கோரியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருக்கும் தர்மோனா பகுதியைச் சேர்ந்தவர் டேனியல்(32). மாடு வளர்த்து வரும் இவருக்கும், மந்தாடா பகுதியைச் சேர்ந்த ஷர்மிளா(27) என்ற பெண்ணிற்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் மனைவி படிக்க ஆசைபட்டதால், டேனியல் ஆடு, மாடுகளை வளர்த்து பால் கறந்து மனைவியை கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வைத்துள்ளார்.

ஷர்மிளா படிப்பு முடிந்தவுடன், நீங்கள் மாடு மேய்க்கிறீர்கள், நான் கம்ப்யூட்டர் படித்துவிட்டேன். உங்களுக்கும், எனக்கும் இனி செட் ஆகாது என்று கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஷர்மிளா கோபித்து கொண்டு அம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது குறித்தான வழக்கு விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் கடந்த மாதம் தொடங்கியது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.

மனைவி விவகாரத்து கேட்ட அதிர்ச்சியிலும், சோகத்திலும் இருந்த டேனியில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த போது விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார்.

இதை அறிந்த அருகிலிருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால், இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்