தப்பு செஞ்சிட்டேன்! என் குழந்தைகளின் புகைப்படங்களை பாக்கனும்... சிறையில் கதறி அழுத அபிராமி

Report Print Raju Raju in இந்தியா

குழந்தைகளின் நினைவு தன்னை வாட்டுவதாக கூறி சிறையில் தன்னை சந்திக்க வந்த உறவினரிடம் அபிராமி கதறி அழுதுள்ளார்.

சென்னை குன்றத்துாரை சேர்ந்தவர் விஜய். இவர் மனைவி அபிராமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரத்துடன் கள்ளக்காதல் ஏற்பட்டதையடுத்து அவருடன் ஓடி போக நினைத்து தனது இரண்டு குழந்தைகளான அஜய் மற்றும் கார்னிகாவை கொலை செய்தார்.

இதையடுத்து அபிராமி மற்றும் சுந்தரத்தை கைது செய்த பொலிசார் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிராமி நேற்று முன்தினம் மின் இணைப்பில் கை வைத்து, தற்கொலைக்கு முயன்றதாக தகவல்பரவியது.

ஆனால் அதை சிறை அதிகாரிகள் உறுதியாக மறுத்தனர்.

சமூகவலைதளங்களில் இது போன்ற தவறாக தகவல்கள் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில தினங்களுக்கு முன் அபிராமியின் நெங்கிய உறவினர் மனு மூலம் அவரை சந்தித்திருக்கிறார்.

அப்போது அபிராமி என் குழந்தைகளின் நினைவு என்னை வாட்டுகிறது. நான் மன்னிக்க முடியாத தப்பு செய்து விட்டேன். என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும் என கூறி அழுதுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers