திருமண நேரத்தில் ஓடிப்போன மணமகன்: மாமனாரை திருமணம் செய்து கொண்ட மணமகள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் மாமனாரை மருமகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் சமஷ்டிபூரை சேர்ந்தவர் ரோஷன் லால் (65). இவரின் மகனுக்கும் சுவப்ணா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருமண சமயத்தில் தான் காதலித்து வந்த பெண்ணுடன் மணமகன் ஓடிபோய்விட்டார்.

இதனால் திருமண வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் அடைந்தனர்.

இதையடுத்து தனது கெளரவம் கெட்டுவிடக்கூடாது என சுவப்ணாவின் தந்தை அதிர்ச்சி முடிவை எடுத்தார்.

அதன்படி தனது மகளை, அவரின் மாமனாரான ரோஷன் லாலுக்கு திருமணம் செய்துவைத்தார்.

மணப்பெண் சுவப்ணாவும் வேறு வழியின்றி ரோஷனை திருமணம் செய்து கொண்டார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்