பூட்டிய வீட்டினுள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேர்: கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திரப்பிரதேசத்தில் தாய் ஒருவர் குழந்தைகளுக்கு விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் Pernamitta பகுதியை சேர்ந்தவர் Madhavilatha (30). இவருடைய கணவர் Mintasala Koteswara Rao கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்.

அவரது இறப்பை அடுத்து பல்வேறு நிதிப்பிரச்னைகளை குடும்பம் சந்தித்து வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று மகளின் வீட்டிற்கு சென்ற மாமியார் ரங்கம்மா, திங்கட்கிழமையன்று வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது வீடு பூட்டிப்பட்டிருப்பதை பார்த்துள்ளார். ஆனால் வீட்டிலிருந்து கெமிக்கல் வாசம் வருவதை உணர்ந்த அவர், உதவிக்கு பக்கத்து வீட்டர்களை அழைத்துள்ளார்.

வேகமாக விரைந்து வந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, தரையில் கிடந்தவாறு 3 பேரும் வாந்தி எடுத்துக்கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சிடையைந்தவர்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் மீட்கப்பட்ட Madhavilatha மற்றும் அவருடைய மகன் கவலைக்கிடமான நிலையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்