நடிகர் ராதாரவி என்னிடம் தவறாக நடந்து கொண்டார்: பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார்கள் வந்துக்கொண்டிருப்பதை தொடர்ந்து பெண் ஒருவர் நடிகர் ராதாரவி மீதும் பாலியல் புகார் வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடிகைகள் உட்பட சாதாரண பெண்கள், தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து தைரியமாக பேசி வருகின்றனர்.

இவ்வரிசையில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார் ஒன்று வந்ததாக பாடகி சின்மயி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் ஒரு பெண், வைரமுத்துவிற்கு சொந்தமான ஹாஸ்டலில் தான் தங்கியிருந்த போது அவர் தன்னிடம் அத்துமீறீ நடந்துக்கொண்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொருப் பெண் தன்னிடம் நடிகர் ராதாரவி தவறாக நடந்துக்கொண்டார் என பகிர் தகவல் வெளிட்டுள்ளார்.

மேலும் அப்பெண், ராதாரவியை வேலை விடயமாக சந்திக்க சென்றிருந்தேன். அப்போது அவர் என்னை கட்டி அணைத்து முகத்தில் முத்தமிட்டார். மேலும் வேலையை நன்றாக செய் என்றும் பார்க்க நான் நல்லா இருக்கிறேன் என்றும் கூறினார்.

பின் நான் அந்த வேலையையே விட்டுவிட்டேன். அவருக்கு செல்வாக்கு இருப்பதால் இதை அப்போது நான் வெளியே சொல்லி இருந்தாலும் பலன் கிடைத்திருக்காது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers