மனைவியை அரிவாளால் வெட்டி எரிக்க முயன்ற கணவன்!

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் வரதட்சணை கேட்டு பெண்ணோருவர் அரிவாளால் வெட்டப்பட்டு, எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரின் வாசன் நகரை சேர்ந்த தம்பதி கிஷோர்-ஜெயநந்தினி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கிஷோர் 10 லட்சம் ரூபாய் வரதட்சனை கேட்டு ஜெயநந்தினியை துன்புறுத்தியுள்ளார். அத்துடன் ஜெயநந்தினியின் மாமியார், மாமனார், நாத்தனார் சத்யா, அவரது கணவர் ஆகியோருடன் சேர்ந்து கிஷோர் தனது மனைவியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

மேலும், அவரை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்த முயன்ற நிலையில், அவர்களிடம் இருந்து ஜெயநந்தினி தப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக ஜெயநந்தினி சார்பில் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers