மீண்டும் ஒரு கோர சம்பவம்! கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட இளைஞர்... கதறி அழும் காதலி

Report Print Vijay Amburore in இந்தியா

தெலுங்கானாவில் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் தடிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (24). இவரும் Vankayalagudem பகுதியை சேர்ந்த 12-ம் மாணவி சாய் தீபிகாவும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.

குமார் வேற்று சமுகத்தை சேர்ந்தவர் என்பதால் தீபிகாவின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வரும் தீபாவளியுடன் தீபிகாவிற்கு 18 வயது பூர்த்தியடைவதால், இருவரும் சேர்ந்து திருமணம் செய்துகொள்ளலாம் என குமார் திட்டமிட்டிருந்துள்ளார்.

இந்த விவகாரம் தீபிகாவின் வீட்டிற்கு தெரியவரவே, பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்த பொலிஸார் குமாரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அதனையும் மீறி நேற்று மீண்டும் தீபிகாவை சந்தித்து விட்டு வருவதாக கூறி குமார் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் குமார் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குமாரின் உறவினர்கள் பல பகுதிகளிலும் தேட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் Vankayalagudem கிராமத்திற்கு அருகே உள்ள பகுதியில் குமாரின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், குமாரின் உறவினர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்