வைரமுத்து குறித்து தொடர்ந்து மரியாதையாக பேசியது ஏன்? உண்மையை உடைத்த சின்மயி

Report Print Raju Raju in இந்தியா

வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என புகார் தெரிவித்துள்ள சின்மயி இடைபட்ட காலத்தில் அவர் பற்றி பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து 12 ஆண்டுகளுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் பாட்டு கச்சேரிக்கு சென்ற போது உடன் இருந்த தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி டுவிட்டரில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் இதன் பிறகான காலகட்டத்தில் அதாவது 2011, 2013, 2014ல் வைரமுத்து குறித்து மரியாதையான பதிவுகளை சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

2014ல் சின்மயி தனது பதிவில், வாவ், வைரமுத்து சார்க்கு பத்மபூஷன் விருது கிடைத்துள்ளது என பதிவிட்டார்.

2013-ல் இரு முறை வைரமுத்து சார் எழுதிய பாடல் வரிகளில் திரைப்படங்களில் பாடியுள்ளேன் என குறிப்பிட்டார்.

இது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு தற்போது விளக்கமளித்துள்ளார் சின்மயி.

அந்த பதிவில், ஆம் நான் பாடிய புதிய பாடல்கள் குறித்தே அவ்வாறு பதிவிட்டேன், அதில் பாடலாசிரியர், இசையமைப்பாளர், என்னுடன் இணைந்து பாடியவர் என எல்லோரையும் தான் குறிப்பிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

அதே போல பத்ம பூஷன் விருதை வைரமுத்து வாங்கியது குறித்து நான் பதிவிடவில்லை என்றால் எல்லோரும் ஏன் டுவிட்டரில் பதிவிடவில்லை என கேட்பார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்