பெண்களின் வன்கொடுமைக்கு தீர்வு என்ன? வைரலாகும் கவிஞர் வைரமுத்துவின் பதிவு

Report Print Raju Raju in இந்தியா

பெண்களுக்கு நேரும் வன்கொடுமைகள் குறித்து வைரமுத்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.

தேசிய அளவில் பிரபலமான கவிஞர் வைரமுத்து மீது சந்தியா மேனன் என்பவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரபல பாடகியான சின்மயி, வைரமுத்துவுடன் சுவிட்சர்லாந்தில் இசைகச்சேரி நடத்தியபோது அவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வைரமுத்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 2012-ல் பாலியல் தொல்லை குறித்து வைரமுத்து பதிவிட்ட டுவீட் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதில், பெண்களுக்கு நேரும் வன்கொடுமைகளுக்குக் கலை ஊடகங்களும் காரணமா? காரணமென்றால் எது தீர்வு? என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்