வீடு முழுவதும் ரத்தம்: தனித்தனியாக கிடந்த சடலங்கள்.. கதறி அழுதுகொண்டிருந்த சிறுவன்

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் திறந்து கிடந்த வீட்டினுள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டதோடு, சிறுவன் கதறி அழுதுகொண்டிருந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகே உள்ள Kishangarh கிராமத்தில் வசித்து வருபவர் மிதிலேஷ். இவருடைய வீடு திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்துக்கு வீட்டார் இன்று அதிகாலை 5 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் வீட்டினுள் சென்று பார்த்த போது, படுக்கையறையில் மிதிலேஷ், அவருடைய மனைவி சியா மற்றும் மகள் நேஹா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டறிந்துள்ளனர்.

பின்னர் அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் வீட்டில் கதவு ஓரத்தில் பலத்த காயங்களுடன் அழுதுகொண்டிருந்த சிறுவன் சுராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்