என் பொண்ணு பிறந்தநாளுக்கு கல்லறையில் இன்னிக்கு கேக் வெட்டுவோம்: கண்ணீரில் தாய்

Report Print Raju Raju in இந்தியா

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலினின் பிறந்தநாளாகிய இன்று அவர் குறித்து தாய் உருக்கமாக பேசியுள்ளார்.

கடந்த மே மாதம் 22-ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் தன் உயிரை நீத்தவர்களில் ஒருவர் ஸ்னோலின்.

அவருக்கு இன்று 19-வது பிறந்தநாள். அவர் குறித்து தாய் வனிதா பேசுகையில், போன வருடம், ஸ்னோலின் பிறந்தநாளுக்கு வீடே கலகலன்னு இருந்துச்சு. ராத்திரி 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடினோம்.

அதுதான் என் புள்ளை கொண்டாடப்போகும் கடைசி பிறந்தநாள்னு அன்னைக்குத் தெரியாம போச்சு.

இந்த வருடமும் அவள் பிறந்தநாளைக் கொண்டாடுறோம். கேக் வாங்கிட்டு வந்திருக்கோம். சர்ச்ல வெட்டிட்டு, சாயந்தரம் கல்லறைக்குப் போய் அங்கேயும் கேக் வெட்டப்போறோம். அவள் நினைவா ரெண்டு புள்ளைகளுக்கு டிரெஸ் எடுத்துக்கொடுத்திருக்கேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்