வைரமுத்து தரப்பினரால் சின்மயிக்கு என்ன நடந்தது? விளக்கிய சின்மயியின் தாய்

Report Print Raju Raju in இந்தியா

2004-ல் வெளிநாட்டில் இசை நிகழ்ச்சியின் போது வைரமுத்து தரப்பில் இருந்து தனது மகளுக்கு பாலியல் ரீதியான அழுத்தம் வந்தது என சின்மயியின் தாய் விமலா கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தன்னை சுவிட்சர்லாந்தில் படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி குற்றஞ்சாட்டினார்.

இரு நாட்களாக இந்த சர்ச்சை தொடர்ந்த நிலையில் வைரமுத்து இன்று டுவிட்டரில் விளக்கமளித்தார்.

அதில், அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது, உண்மையைக் காலம் சொல்லும் என பதிவிட்டார்.

இதற்கு, வைரமுத்து பொய்யர் என சின்மயி பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சின்மயியின் தாய் விமலா, 2004-ல் சுவிட்சர்லாந்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றோம்.

அந்த நிகழ்ச்சி முடிந்தபின்னர் என்னையும், சின்மயியையும் மட்டும் அங்கு இருக்க சொன்னார்கள்.

அப்போது அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர் என்னிடம் வந்து, நீங்கள் இங்கேயே இருங்கள், சின்மயி மட்டும் வைரமுத்து தங்கியுள்ள ஹொட்டலுக்கு வரட்டும் என கூறினார்.

எதற்கு சின்மயி தனியாக வரவேண்டும் என நபரிடம் நான் கேட்டேன், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என ஓப்பனாக அவர் பேசினார்.

இதற்கு வேறு ஆட்களை பாருங்கள் என நான் கூற, அவர் மிரட்டும் தொனியில் என்னிடம் பேசினார்.

அதற்கு எங்கள் விமான டிக்கெட்டை கொடுங்கள் நாங்கள் கிளம்புகிறோம் என தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்