வைரமுத்து விவகாரம்: சின்மயியை பாராட்டிய நடிகை ஸ்ரீரெட்டி.... ஐஸ்வர்யா ராயின் பதில்

Report Print Deepthi Deepthi in இந்தியா
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான மீ டூ (#MetooIndia) இயக்கம் இந்தியால் வலுப்பெற்றுள்ளது.

கடந்த சில தினங்களாக ஊடகத்துறை, சினிமா துறையை சேர்ந்த பெண்களை தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து பகிர்ந்து வருகிறார்கள்.

பாலிவுட்டில் நானா படேகர் தொடங்கில் கோலிவுட்டில் வைரமுத்து வரை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுவிட்சர்லாந்தில் பாடகி சின்மயியிடம் வைரமுத்து தவறாக நடக்க முயன்றதாகவும், அதிலிருந்து தப்பித்த பிறகு வைரமுத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட மறுத்ததற்கு பிரபல அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி மிரட்டியதாகவும் சின்மயி பதிவிட்டிருந்தார்.

சின்மயிக்கு நடிகர் சித்தார்த் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஸ்ரீரெட்டியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

வைரமுத்து குறித்து வெளிப்படையாக தெரிவித்த சின்மயிக்கு நடிகை ஸ்ரீரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு துர்க்கையின் தைரியம் இருக்கிறது என்று பாராட்டியுள்ளார்.

இந்த மூவ்மென்ட்டில் வெளியே வந்ததுக்கு நன்றி! எல்லோரும் அவருடைய தைரியத்தை பாராட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் MeTooIndia குறித்து நடிகை ஐஸ்வர்யா ராய் கூறியதாவது, பாலியல் துன்புறுத்தல் குறித்து நான் கடந்த காலத்தில் பேசியிருக்கிறேன், இனியும் பேசுவேன்.

இப்போது, ஒரு பிரசாரம் முன்னெடுப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூகவலைதளங்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. MeToo பிரசாரத்தை நாம் நீர்த்துபோகாமல் முன்னெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...