வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற கணவன்: மனைவியை காதலனுடன் அனுப்பி வைத்து அதிர்ச்சியளித்த பொலிஸ்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணமான பெண்ணை விசாரணை ஏதுமின்றி காதலனுடன் அனுப்பி வைத்த காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏர்வாடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது கணவர் மீன்பிடித் தொழில் செய்வதற்காக சவுதி அரேபியா சென்றுள்ளார்.

இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு இளைஞருடன் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் சில தினங்களுக்கு முன் காணமல் போயுள்ளார்.

இதனால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை கண்டுபிடித்து அழைத்து வந்த உதவி ஆய்வாளர் சரவணன், அதைப் பற்றி எதுவும் விசாரணை நடத்தாமல் காதலனுடன் அனுப்பி வைத்ததால், கணவர் வீட்டார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் உதவி ஆய்வாளர் மீது கணவர் வீட்டார் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்