என் மகனை வேண்டும் என்றால் தூக்கில் போடுங்கள்..மற்றவர்களை தாக்காதீர்கள்: கண்ணீர் மல்க பேசிய தாய்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் என் மகனை வேண்டும் என்றால் தூக்கில் போடுங்கள், மற்றவர்களை தாக்காதீர்கள் என்று பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இளைஞரின் தயார் உருக்கமாக கூறியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் அதன் பின்விளைவுகள் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை உலுக்கியுள்ளது.

அதாவது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் செய்துள்ளான். இதன் விளைவுகளே குறித்த மாநிலங்களை உலுக்கியுள்ளது.

இந்நிலையில் அந்த இளைஞனின் தயார், என் மகன் குற்றம் செய்திருந்தால் அவனை தூக்கிலிடுங்கள். ஆனால், என் மகன் செய்த பாவத்திற்கு மற்ற பீகார் மக்கள் மீது தாக்குதல் நடத்தவோ, வெளியேற்றவோ வேண்டாம்தன்னுடைய மகன் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டதாக ஊடகங்களின் முன்பு அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

மேலும் என் மகன் ஒரு மைனர். சில நேரங்களில் மனநிலை பாதிக்கப்பவன் போல் சமீப காலமாக நடந்து வருகிறான்.

அவன் 5-ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. நான்கு சகோதரர்களில் இவன் மூன்றாவது பிறந்தவன். இரண்டு வருடங்களுக்கு முன்பு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் குஜராத்திற்கு தனது நண்பர்களுடன் சென்றுவிட்டான். அவன் எங்கிருக்கிறான் என்பதே சில மாதங்களுக்கு முன்பு தான் தெரிந்தது என்று இளைஞனின் தந்தை கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers