தொடக்கூடாத இடங்களில் கை வைத்தார்: சின்மயி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அடுத்த முக்கிய நபர்

Report Print Deepthi Deepthi in இந்தியா
1808Shares
1808Shares
ibctamil.com

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ள பாடகி சின்மயி, தொடர்ந்து தன்னை போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துவருகிறார்.

பெண் ஒருவர் சன் டிவி, கலைஞர் டிவி போன்ற பெரிய இடங்களில் பணிபுரிந்த ரமேஷ் பிரபா என்பவர் பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.

அதனை சின்மயி டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

அப்பெண் கூறியிருப்பதாவது, சுட்டி தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை சந்தித்தேன், அப்போது அவர் தன்னை தொடக்கூடாத இடங்களில் கை வைத்து, முத்தம் கொடுத்து இதுபோல் என் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்தால் தொகுப்பாளினியாக பணிபுரிய வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறியதாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்