18 வயது இளம்பெண்ணை காதலித்த வைரமுத்து? தவறான பார்வை: அதிர்ச்சியடைந்த பெண்!

Report Print Deepthi Deepthi in இந்தியா
1203Shares
1203Shares
ibctamil.com

வைரமுத்து மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் பாடகி சின்மயி, தன்னை போன்று பாதிக்கப்பட்ட பெண்கள் தன்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களையும் தனது சமூகவலைதளத்தில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், 18 வயது இளம்பெண் ஒருவர் தன்னிடம் வைரமுத்து, அவரது காதலை தெரிவித்ததாக பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எனக்கு 18 வயது இருக்கும்போது சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிய சென்னைக்கு வந்தேன்.

அப்போது, எனது அம்மாவுடன் சென்று வைரமுத்துவை சந்தித்தேன். அவர், ரஹ்மானிடம் எனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறினார். அவரது பார்வை தவறாக இருந்தது.

ஒரு சில நாட்கள் கழித்து ரஹ்மானிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அதன்பிறகு தொடர்ந்து என்னிடம் போனில் பேசினார். தான் ஒரு கவிதை எழுதி வருவதாகவும், அந்த கவிதையை என்னை மனதில் வைத்தே எழுதியதாகவும், என் மீது காதல் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதனைகேட்டு அதிர்ச்சியடைந்த நான், உங்களை எனது அப்பா போன்று நினைக்கிறேன் என அவரிடம் தெரிவித்தேன். எனது வாழ்விலும் இப்படி ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளது என பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்