திருமணம் பதிவு செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்ட காதலர்கள்: வெளியான பகீர் காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இருவேறு மதங்களை சார்ந்த காதலர்கள் தங்கள்திருமணத்தை முறைப்படி பதிவு செய்த பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள இத்திரிக்கர பாலம் அருகே அமைந்துள்ள ஆற்றில் குதித்து காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குறித்த பாலம் அருகே புதன் அன்று நள்ளிரவில் இருவரின் நடமாட்டம் தொடர்பில் சந்தேகம் எழுந்ததை அடுத்தே அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி சம்பவப்பகுதியில் இருந்து இருச்சக்கர வாகனம் ஒன்றும், அதில் ஒரு மொபைல் போன், பாஸ்போர்ட், திருமணம் பதிவு செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் 3,000 ரூபாய் பணம் என இருந்துள்ளது.

இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் இருவரது உடல்களையும் மீட்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர் மனு பரவூர் பகுதியில் குடியிருந்து வருபவர் எனவும், இஸ்லாமியரான சுறுமி என்பவரின் கணவரின் நண்பர் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சுறுமியின் கணவர் விபத்து ஒன்றில் கொல்லப்பட, அப்போது சுறுமிக்கு தேவையான நிதி உதவிகளை மனு அளித்து வந்துள்ளார்.

இது நாளடைவில் காதலாக மாறவே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

ஆனால் இருவேறு மதம் என்பதால் தங்களை ஒருபோதும் சேர்ந்து வாழ இருவரது குடும்பத்தினரும் அனுமதிக்கப்போவதில்லை என அறிந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers