சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை! தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் பிரபல சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர் தற்கொலை செய்துகொண்ட விடயம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் ‘சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி’ தமிழகம் முழுவதும் பிரபலமானது. இதன் நிறுவனர் சங்கர் மயிலாப்பூரில் வசித்து வந்தார்.

இந்நிலையில், அவர் தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது இந்த முடிவுக்கான காரணம் எதுவும் தெரியவில்லை.

சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் வட இந்தியாவில் மட்டும் தான் என்று இருந்ததை, தமிழகத்தில் சாத்தியமாக்கியவர் தான் இந்த சங்கர். பல வடமாநில இளைஞர்களும் இவரது பயிற்சி மையத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றாலும், கிராமப்புற மாணவர்களுக்கே இவர் எப்போதும் முன்னுரிமை கொடுத்து வந்தார்.

அத்துடன் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளித்த இவர், ஆண்டிற்கு 300க்கும் அதிகமான நபர்களை அரசு பணியாளர்களாக வெற்றி பெற வைத்திருக்கிறார். இந்தியா முழுக்க தமிழக ஐ.ஏ.எஸ் மாணவர்கள் இருக்க வேண்டும் என்று கடைசி வரை உழைத்தார்.

இந்நிலையில், இவரது மறைவுக்கு பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் உருக்கத்துடன் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி குலோத்துங்கன் கூறுகையில்,

‘என்னை சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராக்கியவர் சங்கர் தான். என்னிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் பயிற்சியளித்து வெற்றி பெற வைத்தார். என்னை மட்டுமில்லை, பலருக்கும் அவர் இப்படி உதவியுள்ளார். அவரது இழப்பு தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers