அம்மா எந்திரிம்மா! சடலமாக கிடந்த தாயை பார்த்து கதறிய குழந்தைகள்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை பூந்தமல்லியில் இறந்துகிடந்த அம்மாவை பார்த்து எந்திரிம்மா என்றும் இறந்த அம்மா எப்போது திரும்பி வருவார் என்றும் கேட்டு குழந்தைகள் கதறுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமணன்சாவடியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி துர்கா.

தம்பதிக்கு சுப்ரியா (3) மற்றும் சிவன்யா (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவனும், மனைவியும் தங்களது வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த பொலிஸ் கூறுகையில், வெங்கடேசன், சரிவர வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையானதால் கணவன் - மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் துர்காவின் முகத்தில் தலையணையால் அமுக்கிக் கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். அதன்பிறகு வெங்கடேசன் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

இருப்பினும், பிரேதப் பரிசோதனையில் தான் துர்கா எப்படி இறந்தார் என்ற முழுவிவரம் தெரியவரும்.

தாய் இறந்த கிடந்ததை பார்த்த குழந்தை சுப்ரியா அம்மா எந்திரிம்மா என்று சொல்லியதைக் கேட்டவர்களின் கண்கள் கலங்கின என கூறியுள்ளனர்.

இதனிடையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை பிணவறையில் வெங்கடேசன், துர்கா ஆகியோரின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பிரேதப் பரிசோதனைக்காக அவர்களின் உறவினர்கள் அங்கு காத்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில் உறவினர்களிடம், அம்மா எப்போ வருவாங்க என்று சுப்ரியாவும் சிவன்யாவும் அடிக்கடி கேட்கின்றனர். அவர்களுக்கு இன்னும் சீக்கிரத்தில் வந்துவிடுவாங்க என்று கலங்கிய கண்களோடு உறவினர்கள் ஆறுதல் கூறுகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers