பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்பு கொண்ட சினிமா பிரபலம்

Report Print Raju Raju in இந்தியா

பாலியல் புகார் தெரிவித்த பெண்ணிடம் பிரபல பாடகர் ரகு தீக்சித் மன்னிப்பு கேட்டுள்ளார்.

வைரமுத்துவால் படுக்கைக்கு அழைக்கப்பட்டேன் என கூறிய சின்மயி, பல பெண்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பதிவை டுவிட்டரில் ஷேர் செய்து வருகிறார்.

பாடகர் ரகு தீக்சித் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி ஒருவர் தனது பெயரை தெரிவிக்காமல் சின்மயியிடம் கூறினார். அந்த தகவலை சின்மயி டுவிட்டரில் வெளியிட்டார்.

அதாவது, ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தனது மனைவி பற்றி தவறாக பேசிய ரகு தன்னை அவருக்கு முத்தம் கொடுக்குமாறு கேட்டதாக அந்த பாடகி தெரிவித்தார்.

மேலும் அந்த பாடகியை தூக்க அவர் முயன்றிருக்கிறார். சின்மயியின் டுவீட்டை பார்த்த ரகு டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

அந்த புகார் தொடர்பாக என் பக்க கதையை கூறி மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

சின்மயியின் டுவீட் பற்றிய சம்பவம் எனக்கு நினைவில் உள்ளது. அந்த நபர் யார் என்று எனக்கு தெரியும். அவரிடம் நான் முன்பே மன்னிப்பு கேட்டுள்ளேன். தற்போது பொதுவில் மன்னிப்பு கேட்கிறேன்.

அந்த சம்பவம் நடந்தது, ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டது போன்று அல்ல. அந்த நபரை நான் கட்டிப்பிடித்தேன். நான் அவரை முத்தமிட முயன்றபோது அவர் என்னை தடுத்து நிறுத்தி, ஸ்டூடியோவில் இருந்து கிளம்பினார்.

ரெக்கார்டிங் முடிந்து அவருடன் பேசியபோது என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச்சு வந்தது. என் மனைவிக்கும், எனக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் நான் ஆறுதல் தேடினேன்.

ஆனால் சின்மயி கூறிய சில விடயங்களையும் நான் ஏற்க மாட்டேன்.

நான் பாலியல் விடயத்துக்காக பெண்களுக்கு வலை போடுபவன் இல்லை. பாடும் வாய்ப்பு தருவதாக இந்த பாடகி அல்லது யாருக்காவது வாக்கு கொடுத்தேனா? இல்லவே இல்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers