வைரமுத்து என்ன பெரிய மனுஷனா? வெளுத்து வாங்கிய திலகவதி ஐபிஸ்

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீடு என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களின் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் குறித்து அதில் தையரியமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக அணுகினார் என்ற குற்றச்சாட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் பாடகி சின்மயி.

இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

வைரமுத்து குறித்து பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக முன் வைத்த சின்மயிக்கு ஆதரவாக நடிகர் சித்தார், சமந்தா, ஸ்ரீரெட்டி உள்ளிட்டோரும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

சிலர், அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு வைரமுத்து பழிவாங்கப்படுகிறார் என்று குற்றச்சாட்டை கூறியுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள திலகவதி ஐபிஎஸ், சின்மயி கூறியுள்ள இந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரிக்கப்படவேண்டும்.

சின்மயி டுவிட்டரில் கூறியுள்ள புகார்களுக்கு காலம் தான் பதில் சொல்லும் என்று வைரமுத்து கூறுகிறார். ஆனால், சின்மயி கையை காலம் கையைப்பிடித்து இழுக்கவிலைல, நீங்கள் தான் கையை பிடித்து இழுத்தீர்கள்.

அப்படியென்றால் நீங்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் பெரிய மனிதர் என்று சொல்கிறார்கள். காசு கொடுத்தால் பாட்டு எழுதிதரப்போகிறார். அவர் பெரிய மனிதர் என்று நாங்கள் தான் சொல்ல வேண்டும். அவர் சொல்லக்கூடாது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்