வைரமுத்து என் அப்பா....அவரை அவமானப்படுத்தினால் என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றுவேன்: சீமான்

Report Print Deepthi Deepthi in இந்தியா
961Shares
961Shares
ibctamil.com

வைரமுத்து - சின்மயி விவகாரம் தற்போது தமிழகத்தில் பரபப்பாக பேசப்பட்டு வருகின்ற நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவை எனது தகப்பன் போன்று நினைக்கிறேன். அவரை ஒரு அடையாளமாக நான் கருதுகிறேன். அந்த அடையாளத்தை நீங்கள் அவமானப்படுத்தி, சிதைக்கவேண்டுமென்று நினைக்கும்போது, என்ன விலை கொடுத்தாவது நான் அதனை காப்பாற்ற நினைப்பேன்.

இது என்னுடைய கருத்து. இப்படி ஒரு சம்பவம் நடந்தபோது அவர் இதை கூறியிருந்தால் சரியாக இருந்திருக்கும். 15 ஆண்டுகள் கழித்து இதனை வெளியில் சொல்லியிருக்கிறார். அதுவும் Meoo என்ற எழுச்சி வந்திருப்பதால் இதனை சொல்லியிருக்கிறார்.

Meoo வராமல் இருந்தால் அவர் இதை சொல்லியிருக்கமாட்டார். இதில் அரசியல் சம்பந்தப்பட்டிருக்கிறது. வைரமுத்துவை அவமானப்படுத்தும் முயற்சி ஆகும்.

மத்திய அமைச்சர் அக்பர், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார் என்பதற்காக அவரை பதவி விலக சொல்கிறார்கள். ஏன், அக்பர் என்ற இஸ்லாமிய அமைச்சர் மட்டும் தான் குற்றவாளியா? மற்ற அமைச்சர் ராமரா?

கத்துவா சிறுமிக்கு நடந்த துயரம் குறித்து குரல் கொடுக்காத பாஜக, வைரமுத்து குறித்து பிரச்சனை வரும்போது நீங்கள் பேசுவது எங்களுக்கு பேசுவது சந்தேகமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்