3 வருட காதல்: ஜாலியாக பழகிய காதலன்... இறுதியில் காதலிக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா
145Shares
145Shares
ibctamil.com

தெலுங்கானாவில் மூன்று ஆண்டுகளாக காதலித்து விட்டு காதலியை திருமணம் செய்ய காதலன் மறுத்த நிலையில், காதலனை அடைய காதலி போராடி வருகிறார்.

பதிகொண்டாவில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பவன். இவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்ட நிலையில் பின்னர் காதலாக மாறியது.

மூன்று ஆண்டுகளாக காதலியுடன் ஜாலியாக பவன் இருந்த நிலையில் திருமணம் குறித்து காதலி, பவனிடம் பேசியுள்ளார்.

ஆனால் காதலியை திருமணம் செய்ய விருப்பப்படாத பவன் சில மாதங்களாக அவரை புறக்கணிக்க தொடங்கினார்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் பவன் ஊருக்கு தனது உறவினர்களுடன் வந்த அந்த பெண் பவன் தன்னை ஏமாற்றியதை ஊர் தலைவர்களிடம் கூறினார்.

பின்னர் பவன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை முன்னரே அறிந்த பவன் மற்றும் குடும்பத்தார் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்கள்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்த பொலிசார், பவனுக்கு கவுன்சில் கொடுத்து அவருடன் சேர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும், பவன் திருமணத்துக்கு மறுத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்