நீங்கள் என் அப்பா மாதிரி, அப்படி செய்யாதீங்க: வைரமுத்து குறித்து பெண் இசைக்கலைஞர் அதிர்ச்சி பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

வைரமுத்து தன்னிடம் தவறாக பேசினார் என பெண் இசையமைப்பாளரான சிந்துஜா ராஜாராம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறினார்.

இதன்பின்னர் சில பெண்கள் வைரமுத்து மீது கூறிய பாலியல் புகாரை சின்மயி டுவிட்டரில் ஷேர் செய்தார்.

ஆனால் அவர்கள் யாரும் தங்களின் பெயர் மற்றும் அடையாளங்களை கூறவில்லை.

இந்நிலையில் சிந்துஜா ராஜாராம் (32) என்ற பெண் வைரமுத்து தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார் என ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.

இந்த பேட்டியை சின்மயி டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

சிந்துஜா கூறுகையில், நான் 2002-ம் ஆண்டில் என் 16-வது வயதில் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தேன்.

எனக்கு 18 வயது இருக்கும் போது கோஸ்மிக் ஸ்டுடியோவில் வேலை செய்தேன்.

அப்போது என் தந்தைக்கு பெங்களூரில் பணி மாற்றம் செய்யப்பட்டதால் சென்னையில் நான் தங்க நல்ல விடுதியை என் அம்மா தேடினார்.

அப்போது தான் கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்து விடுதி குறித்து கேள்விப்பட்டு அதற்கு போன் செய்தோம்.

அப்போது வைரமுத்து என் அம்மாவிடம் பேசினார், நானும் சினிமா துறையில் இருப்பதாக அவர் வைரமுத்துவிடம் கூறினார்.

பின்னர் வைரமுத்துவை நேரில் சந்தித்தோம்.

அப்போது நான் இசையமைத்த பாடல் சிடியை எடுத்து சென்றேன்.

அதை பார்த்த வைரமுத்து ஏ.ஆர் ரகுமானிடம் இதை காண்பிப்பேன் என கூற என மகிழ்ச்சியாக் இருந்தது.

ஆனால் என்னால் வைரமுத்து விடுதியில் தங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் என் குடும்ப நண்பர் வீட்டில் தங்கினேன்.

ஆனால் வைரமுத்து என் போன் நம்பரை வாங்கி கொண்டார்.

ஒரு வாரம் கழித்து எனக்கு போன் செய்த வைரமுத்து என்னை பார்க்க வேண்டும் என கூறினார்.

நானும் சரி என பேசி போனை வைத்துவிட்டேன்.

ஆனால் மீண்டும் மீண்டும் போன் செய்து தவறாக என்னிடம் பேசினார்.

அதாவது, நான் உன்னை மிஸ் செய்கிறேன், உன்னை நினைத்து கவிதை எழுதுகிறேன். உன் மீது காதல் கொண்டுள்ளேன் என கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நான், நீங்கள் என் அப்பா மாதிரி, இப்படியெல்லாம் பேசாதீர்கள். உங்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது என கூறினேன்.

இதன் பின்னரும் எனக்கு அவர் போன் செய்ய நான் போனை எடுக்கவில்லை.

அப்போது தான் சன் டிவியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் அவர் இப்படி தொல்லை கொடுப்பது தெரியவந்தது.

இதன் பின்னர் வைரமுத்து போனை நான் எடுக்கவேயில்லை.

எனக்கு அவரால் நேரில் பாதிப்பு ஏற்படவில்லை என்பதால் இது குறித்து புகார் அளிக்கவில்லை.

ஆனால் என் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் இது குறித்து கூறினேன்.

சின்மயியிடமும் இது குறித்து இமெயிலில் கூறினேன்.

பின்னர் தான் சின்மயி தவிர யாரும் தங்கள் பெயரை கூறவில்லை என்பதை உணர்ந்தேன்,இதையடுத்து நானே தற்போது வைரமுத்து குறித்து பேசியுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்