திருமணமாகாத விரக்தி: வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்த மகன் செய்த திடுக்கிடும் செயல்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கந்தன் (60). இவர் மனைவி கொடிசி (52). தம்பதிக்கு கோபி (35), ராஜீவ்காந்தி(32), குமார்(29), உதயசூரியன்(26), சின்னகவுண்டர்(25) என்ற 5 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் குமார், உதயசூரியன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கோபி, ராஜீவ்காந்தி, சின்னகவுண்டர் ஆகிய 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை.

கோபி வெளிநாட்டில் வேலை பார்த்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் சொந்த ஊர் வந்தார்.

இந்நிலையில் தனது பெற்றோரிடம் தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்க கோபி கோரியும், அவர்கள் இது குறித்த முயற்சியில் ஈடுபடவில்லை என தெரிகிறது.

இதனால் பெற்றோரிடம் தகராறு செய்து வந்த கோபி நேற்று மது குடித்துவிட்டு வந்து இது குறித்து தனது தந்தை கந்தனிடம் சண்டை போட்டார்.

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கந்தனின் தலையை பிடித்து சுவரில் வேகமாக அடித்ததாக தெரிகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கந்தன் உயிரிழந்தார்.

இதையடுத்து பொலிசார் கோபியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers